புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014


சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரி பதவி ஏற்பார்: உத்தவ் தாக்கரே பேட்டி

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

இந்த தேர்தலில் மக்கள் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு எனக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் என் மீது புகார் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தை அவர்களுக்கு அளிக்க மாட்டேன். என்னை முதல்-மந்திரி ஆக தேர்வு செய்வது பற்றி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், எந்த பதவிக்காகவும் நான் ஆசைப்பட்டது கிடையாது. இருப்பினும், சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரி பதவி ஏற்பார்.

அனைத்து கட்சிகளும் தனது அடித்தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. எனினும், யதார்த்தங்களை அடிப்படையாக வைத்து முடிவுகள் எடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலின்போது மக்கள் மாற்றத்தை விரும்பி நரேந்திர மோடிக்கு வாக்களித்தார்கள். பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி பெற்ற வெற்றிக்கு சிவசேனாவின் பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

ad

ad