புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


ஆலையடி வேம்பு உதயம் வி.க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி விநாயகபுரம் மின்னொளி சம்பியன்

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழகம் நடத்திய 20 வயதுக்குட்பட்ட 7 பேர் கொண்ட காற்பந்தாட்டப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியனானது.

இச்சுற்றுப்போட்டியில் 8 கழகங்கள் பங்குபற்றின. விலகல் முறையில் நடத்தப்பட்ட போட்டியின் இறுதி சுற்றுக்கு விநாயகபுரம் சுப்பர் ஸ்டார், விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக்கழகங்கள் தகுதி பெற்றன.

இதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1:0 என்ற அடிப்படையில் விநாயகபுரம் மின்னொளி சம்பியனானது.

உதயம் விளையாட்டுக்கழகத்தின் தவைலர் எம்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அனுசரணையாளர்கள் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

ஆட்டநாயகனாக மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் வீரர் எஸ். தனு தெரிவு செய்யப்பட்டார்.  

ad

ad