புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் ஒழிப்பேன்! மைத்திரிபால

நாட்டின் இன்றைய அரசாங்கம் 18 ஆவது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை எண்ணி தேசிய மருந்து கொள்கை ஒன்றை கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்தேன் ஆனால் முடியவில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை 100 நாட்களுக்கு ஒழிக்க எனக்கு அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் கோருகிறேன்.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தேன்.
அமைச்சராக பதவி வகித்த போது இவ்வளவு அழுத்தங்கள் என்றால் நாட்டு மக்கள் எவ்வாறான அழுத்தங்களை எதிர்நோக்குவார்கள் என எனது குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பராவாயில்லை நாட்டு மக்களுக்கு நன்மை செய்யுமாறு மனைவி பிள்ளைகள் கோரியிருந்தனர்.
நாட்டு மக்கள் வாழ்வதற்கு சிறந்த பொருளாதாரம் இல்லை. நான் அங்கம் வகிக்கும் பிரதேச விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
நான் பொது வேட்பாளராக போட்டியிடுவேன். முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சுதந்திரமான ஊடகம், ஊடகவியலாளர்கள் இந்த நாட்டில் சந்தர்ப்பம் இல்லை என்பதை எமது சகோதர ஊடகவியலாளர்களுக்கு தெரியும். ஊடக சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ளது.

ad

ad