புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

கட்டாருக்காக நடந்த விசாரணையில் சிக்கியது இங்கிலாந்து 
2022ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டித் தொடரை நடத்துவதற்கான நாட்டினை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் வாக்கெடுப்பில் பணத்தினை அள்ளி
வழங்கி ஆதரவை பெற்றுக் கொண்டாதாக முவைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், கட்டார் அவ்வாறான மோசடிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் இது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளில் 2018 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக இங்கிலாந்தின் காற்பந்து சம்மேளனமே முறையற்ற செயற்பாடுகளை மேற்கொண்டதாக சிக்கிக்கொண்டுள்ளது.

இதனால் 2018ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டிகளை நடத்தும் வாய்ப்பை எதிர்ப்புகள் ஏதுமின்றி ரஷ்யாவும் 2022ஆம் ஆண்டுக்கான வாய்ப்பை கட்டாரும் பெற்றுள்ளமையால் 2022ஆம் ஆண்டுக்கான காற்பந்தாட்ட உலக கிண்ண போட்டிகளை நடத்தும் நாட்டை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை மீண்டும் நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தலுக்கு முடிவுகாணப்பட்டுள்ளது.

ad

ad