புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2014

இலங்கை அணி வெற்றி
 
மெய்ன் அலி, ரவி போபாரா ஆகியோரின் துடுப் பாட்டத்தை துருப்புச்சீட்டாக வைத்து இங்கிலாந்து அணி இறுதிவரை போராடிய போதிலும் இறுதியில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ அரங்கில் நடைபெற்றது.

போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத் தடுப்பை தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, டில்சான் - குசல் பெரேரா ஆரம்பித்து வைத்த அதிரடியான ஆரம்ப இணைப்பாட்டத்தை (120), பின்வரிசை வீரரான ஜீவன் மென்டிஸ் முடித்து வைக்க இலங்கை அணி 50 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 317 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் டில்சான் 88, குசல் பெரேரா 59, ஜெயவர்த் தன 55, இறுதியில் வாணவேடிக்கை நிகழ்த்திய ஜீவன் மென்டிஸ் (14 பந்துகள் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 30 ஓட்டங்களை எடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ட்ரெட்வெல், ஸ்ரோக்ஸ் ஆகியோர் தலா 2 விக் கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

318 ஓட்டங்கள் என்ற கடின வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அணித் தலைவர் குக் - மெய்ன் அலி சிறப்பான (51)அடித்தளமிட்டது. 

அவர்களின் சிறப்பான அடித்தளத்தை தொடர்ந்து வந்த வீரர்கள் பயன்படுத்தாத போதிலும் ரவி போபாரா கைகொடுத்தார்.

எனினும் அவரால் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதையை நோக்கிய பயணிக்க வைக்க முடியவில்லை.

இறுதியில் இங்கிலாந்து அணியால் 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழ ந்து 292 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர் மெய்ன் அலி 119, போபாரா 65, இயன் பெல் 35 ஓட்டங்களை எடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில்  திஸார பெரேரா 3, அஜந்த மென்டிஸ், ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் டில்சான் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் இதே மைதானத்தில் ஆரம்பமாகிறது.     

ad

ad