புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2014

 குப்பைத் தொட்டியில் 250 ஆதார் அட்டைகள்: வாணியம்பாடியில் பரபரப்பு
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் குப்பைத் தொட்டியில் இருந்து 250 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அரசின் மானியங்களை பெற ஆதார் அட்டையை கொண்டு வந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் தற்போதைய மத்திய அரசும் ஆதார் அட்டை வழங்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதனால், ஆதார் அட்டைகள் பெற பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான ஆதார் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் விநியோகிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
 
இந்நிலையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள பஷீராபாத் என்ற கிராமத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் 250 ஆதார் அட்டைகள் கிடந்ததை ஊர்மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து முதலில் செய்தியாளர்களுக்கு ஊர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்கள், காவல்துறையினருக்கு தகவல் கூறியுள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்து 250 ஆதார் அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அதிகாரி சம்பத், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, வாணியம்பாடி தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றி வரும் பரந்தாமன் என்பவர்தான் இந்த ஆதார் அட்டைகளை விநியோகிக்க கொண்டு சென்றது தெரியவந்தது.
 
அவரிடம் இருந்த ஆதார் அட்டைகள் எப்படி குப்பைத் தொட்டிக்கு சென்றது என்பது குறித்து போஸ்ட்மேன் பரந்தாமனிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சம்பத், ஆதார் அட்டைகளை குப்பைத் தொட்டிகளில் வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

250 ஆதார் அட்டைகள் குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad