புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2014

 சென்னையில்  கொள்ளை போன 2800 பவுன் தங்க நகைகள் மீட்பு

சென்னையில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீசார் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்தனர். மொத்தம் 405 வழக்குகளில் தொடர்புடைய 504 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இவர்களிடம் இருந்து 2800 பவுன் தங்க நகைகள் 37 கிலோ வெள்ளி பொருட்கள் 294 வைரக்கற்கள், ரூ.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு ரூ.80.5 கோடி ஆகும்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

கமிஷனர் ஜார்ஜ் இதில் பங்கேற்று பொருட்களை பறிகொடுத்த உரியவர்களிடம் வழங்கினார். அப்போது கூடுதல் கமிஷனர்கள் ஆகாஷ்குமார், கருணாசாகர், திருஞானம், இணை கமிஷனர்கள் ஸ்ரீதர், தினகரன், சண்முகவேல், வரதராஜூ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் குறிப்பாக நகைகள் அனைத்தும் கமிஷனர் அலுவலகத்தில் கீழ்த்தளத்தில் உள்ள 2 அறைகளில் ஹாலில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கமிஷனர் அலுவலக வளாகம் நகைகடை போல் காட்சி அளித்தது.

நகை உரிமையாளர்களும், அதனை வாங்குவதற்காக வந்து இருந்தனர். அனைவரும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குற்றங்கள் குறைந்து உள்ளது. கடந்த அண்டு 74 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 64 வழக்குகள் பதிவாகி உள்ளன.

செயின் பறிப்பு வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு 506 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளது. இந்த ஆண்டு 389 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு 163 கொலைகள் நடந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 125 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது.

சென்னை நகரில் 1748 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு இதே சட்டத்தில் 1601 பேர் மீது மட்டுமே குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த தகவல் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இரவு– பகலாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.கொள்ளை போன 2800 பவுன் தங்க நகைகள் மீட்பு

 கடந்த 4 மாதங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீசார் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்தனர். மொத்தம் 405 வழக்குகளில் தொடர்புடைய 504 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இவர்களிடம் இருந்து 2800 பவுன் தங்க நகைகள் 37 கிலோ வெள்ளி பொருட்கள் 294 வைரக்கற்கள், ரூ.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு ரூ.80.5 கோடி ஆகும்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

கமிஷனர் ஜார்ஜ் இதில் பங்கேற்று பொருட்களை பறிகொடுத்த உரியவர்களிடம் வழங்கினார். அப்போது கூடுதல் கமிஷனர்கள் ஆகாஷ்குமார், கருணாசாகர், திருஞானம், இணை கமிஷனர்கள் ஸ்ரீதர், தினகரன், சண்முகவேல், வரதராஜூ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் குறிப்பாக நகைகள் அனைத்தும் கமிஷனர் அலுவலகத்தில் கீழ்த்தளத்தில் உள்ள 2 அறைகளில் ஹாலில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கமிஷனர் அலுவலக வளாகம் நகைகடை போல் காட்சி அளித்தது.

நகை உரிமையாளர்களும், அதனை வாங்குவதற்காக வந்து இருந்தனர். அனைவரும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குற்றங்கள் குறைந்து உள்ளது. கடந்த அண்டு 74 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 64 வழக்குகள் பதிவாகி உள்ளன.

செயின் பறிப்பு வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு 506 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளது. இந்த ஆண்டு 389 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு 163 கொலைகள் நடந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 125 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது.

சென்னை நகரில் 1748 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு இதே சட்டத்தில் 1601 பேர் மீது மட்டுமே குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த தகவல் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இரவு– பகலாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ad

ad