புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014


நீலகிரியில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஸ்டிரைக்
தமிழகம் முழுவதும் ஓடும் ஆட்டோக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மீட்டர் கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச கட்டணம் 25 ரூபாய் என்றும், கி.மீட்டருக்கு 12 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் அதிகம் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மீட்டர் கட்டணம் தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 3 ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் கட்டணத்தை கண்டித்து இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை ஊட்டி கலெக்டரிடம் பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளனர். இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:–

மீட்டர் கட்டணம் மலை பிரதேசங்களுக்கு பொருந்தாது. ஏற்ற, இறக்கம் மற்றும் திருப்பங்கள் நிறைந்த ரோட்டில் எரிபொருள் மற்றும் தேய்மானங்கள் மற்ற இடங்களை விட அதிகம் உள்ளது.

இதனால் மீட்டர் கட்டணம் குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.  ஆட்டோக்கள் ஓடாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ad

ad