புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

சிவில் பாதுகாப்புபடைப்பிரிவினர் மீது பாலியல் துன்புறுத்தல்!

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்காக மஹிந்தவை சந்திக்கவென வடக்கிலிருந்து அழைத்து செல்லப்பட்ட 47 தமிழ் யுவதிகள் மிகிந்தலை இராணுவ முகாமினை அண்மித்த பகுதியொன்றில் வைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இராணுவத்தினால் உருவாக்கப்பட்டு வன்னியில் செயற்படும் சிவில் பாதுகாப்புபடைப் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்ததொரு மாவட்டத்தைச்சேர்ந்த 47 தமிழ் யுவதிகளை கடந்த 22 ஆம் திகதி மிகிந்தலை என்ற இடத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச்சேர்ந்தவர்களை கடந்த சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடி அவர் தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை தூண்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இச்சந்திப்பிற்கு பின்னர் அங்கு களியாட்ட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இக்களியாட்ட நிகழ்வில் குறித்த மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சிவில்பாதுகாப்பு படைப்பிரிவைச்சேர்ந்த யுவதிகளையும் கலந்துகொள்ளுமாறு நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால் அந்த யுவதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இக்களியாட்ட நிகழ்வில் தேவையான மதுபானமும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதுபோதை தலைக்கேறிய நிலையில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த சிங்கள ஆண்கள் தமிழ் யுவதிகளுடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அவர்களை ஏற்றி வந்த பேரூந்திலும் இத்தகைய துன்புறுத்தல்கள் தொடர்ந்துள்ளது.
இவ்வசம்பாவிதம் தொடர்பில் மறுநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை முகாம் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் அக்கறைகொள்ளாத இராணுவ உயர் அதிகாரி, இவ்வாறான சம்பவங்கள் இதுபோன்ற களியாட்ட நிகழ்வுகளில் சாதாரணமாக இடம்பெறுபவையே எனவும் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தினால் தமக்கு சமுகத்தில் ஏற்படக்கூடிய அவமதிப்புக்களை கருத்தில் கொண்டு தம்மால் இச்சம்வம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசவோ முறைப்பாடுகளை செய்யவோ முடியவில்லை எனவும் பெண்கள் தரப்பினில் குறிப்பிடப்படுகின்றது.
ஏற்கனவே சிவில் பாதுகாப்பு குழுவினில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் யுவதிகள் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் பகிரங்கமான முறைப்பாடு இப்போதே எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad