புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

5 மீனவர்கள் விவகாரம்: இரண்டு நாட்களில் ராஜபக்ச முடிவு
தமிழக மீனவர்கள் 5 பேர் விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச முடிவு செய்ய இருப்பதாக, ஜனாதிபதி அலுவலக செய்தி
தொடர்பாளர்  மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.
இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய இலங்கை ஜனாதிபதி அலுவலக செய்தி தொடர்பாளர் மொஹான் சமரநாயக்க, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதாக இந்தியா தரப்பில் இன்று முறைப்படி எங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்றார்.
மேலும், ஐந்து தமிழக மீனவர்களின் நிலைமை குறித்து இரண்டு நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் மத்திய அரசு உச்சபட்ச கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

ad

ad