புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 500 மில்லியன் ரூபாய்கள
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய முதன்மை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பெயரும் உலவுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பும் இதனை உறுதி செய்துள்ளதுடன் குறித்த உறுப்பினரை கட்சியின் கூட்டங்களில் இருந்து ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் வைத்து நாளை பல கட்சிமாறல் சம்பவங்கள் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதற்காக 500 மில்லியன் ரூபாய்கள் வழங்க இணங்கப்பட்டுள்ளது.
இது சந்தேகத்துக்குரியதாக வெளியிடப்பட்ட அவரது பெயரை இணையத்தளம் ஒன்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்று சனிக்கிழமை முதல் சுகவீனம் என்றுக்கூறி திஸ்ஸ அத்தநாயக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மூன்றாம் தரப்பு ஒன்றின் ஊடாக திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 200 மில்லியன் ரூபாய்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து நாளை நாடாளுமன்றத்தில் வைத்து திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவின் நட்புக்குரிய சந்திராணி பண்டாரவும் 500 மில்லியன் ரூபாய் விடயத்தில் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சந்திராணியின் மகன் ருக்ஸானுக்கு துபாயில் ராஜதந்திர பதவி ஒன்றை வழங்கியதன் மூலம் அரசாங்கம் திஸ்ஸ அத்தநாயக்கவை தமது பக்கம் வெற்றிக்கொண்டதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

ad

ad