புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014



மன்னார் ஆயர் தலைமையில் தமிழ் சிவில் சமூக அமையம் வடிவமைப்பு! மட்டு - அம்பாறை சர்வமத தலைவர்கள் சந்திப்ப
கடந்த 5 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் குரல் கொடுத்துவரும் மன்னார் ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் சமூகம் சமகாலத்தில் தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்டு வெளிப்படையாக இயங்குவதற்கு முன்வந்திருப்பதாக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மேற்படி அமையத்தின் சார்பில் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
 அண்மையில் நடைபெற்ற மேற்படி அமையத் தின் வருடாந்த ஒன்று கூடலில், தமிழர் தாயகத்தின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் சுமார் 60ற்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அனைவராலும் எமது அமையத்தின் கொள்கை ஆவணமும், யாப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஒன்றுகூடலின் போதே அமையத்தின் நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய அமையத்தின் அழைப்பாளராக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் இணைச் செயலாளர்கள் பொ.ந.சிங்கம் ராஜன், பேச்சாளர்களாக குமாரவடிவேல் குருபரன் மற்றும் எழில் ராஜன் மற்றும் பொருளாளராக பேராசிரியர் வி.பி.சிவநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான அமையத்தின் இணைப்பாளர்களும் வடகிழக்கிற்கு வெளியேயான மாவட்டங்களுக்கான ஓர் இணைப்பாளரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு பொருத்தமான வேலைத்திட்டங்களும் அடையாளம் காணப்பட்டதாக, அவர் கூறியிருப்பதுடன், மேற்படி அமையத்திற்காக உருவாக்கப்பட்ட கொள்ளை ஆவணம் பற்றியும் குறிப்புரை வழங்கினார்.

ad

ad