புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

சென்னையில் 80 கிலோ மீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிய பெண்

சென்னையில் கோயம்பேடு, ஆலந்தூர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை பெண் ஓட்டுநர் ஒருவர் ஓட்டிப் பார்த்து பரிசோதித்துள்ளார்.
சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோமீற்றர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்பாதை தயாராகி விட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த சேவை தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
தண்டவாளம் அமைப்பு, சிக்னல்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படைப் பணிகளும் முடிந்து விட்டன.
அந்த வகையில் கோயம்பேடு, சி.எம். பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் உள்ளன.
இங்கு டிக்கெட் கவுண்டர் அமைப்பது உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானமும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெயின் லைனில் ரயில்கள் இயக்கி பரிசோதனையும் நடந்து வருகிறது.
இந்த பாதையில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் ரயிலை பெண் ஓட்டுநர் ஒருவர் இயக்கிப் பார்த்துள்ளார்.
சோதனையின் போது சிக்னல், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ad

ad