புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்க உயர்மட்டம் ஆலோசனை
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆளும் கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதை அடுத்தே இது குறித்து ஆராயப்படுவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் கட்சி பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சுகாதார அமைச்சுப்பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.

இந்தநிலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததும், 1988 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாஸ நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதையும் கருத்திற்கொண்டே இந்த முடிவு பற்றி யோசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பு கூறியுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதியன்று நாடாளுமன்ற விசேட அமர்வை அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
அதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கியுள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி தலைமையிலான காபந்து அமைச்சரவை அரசாங்கம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad