புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

வெளியேற போவது யார்?- அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் ஜனாதிபதி
எதிர்க்கட்சிகளுடன் இணைய போவது யார் என்பது அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில்
ஜனாதிபதி சிக்கலை எதிர்நோக்கி வருவதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
72 மணிநேரத்திற்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்படும். எனினும் அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்களை தெரிவு செய்ய முடியாத சிக்கலை ஜனாதிபதி எதிர்நோக்கியுள்ளார்.
எதிரணியில் இணைய போவது யார் என்பதை அறிய முடியாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த விடயம் சம்பந்தமாக புலனாய்வு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை அழைத்து ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
அதேவேளை பிரதமர் பதவியில் இருந்து டி.எம். ஜயரத்னவை நீக்கி விட்டு வேறு ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதை சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கும் நபர்கள் எதிர்த்துள்ளனர்.
அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமித்தால், ஜயரத்னவுக்கு ஆதரவானவர்கள், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமரின் புதல்வராக அனுராத ஜயரத்னவும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்வதை தவிர வேறு வேலைகளை செய்ய நேரம் இருக்காது என எதிர்க்கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக வாரம் தோறும் அதிகளவானோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ளதே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சிகளின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

ad

ad