புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

 அரசு அலுவலகத்தில் ஜெ. புகைப்படங்கள்: 4 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவுதமிழகத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து ஜெயலலிதாவின் படத்தையும், அரசு திட்டங்களில் ஜெயலலிதாவின் பெயரையும் அகற்றக் கோரிய வழக்கில்,
4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலோ, அரசு நலத்திட்டங்களிலோ இருக்கக்கூடாது, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆட்சிகள்
நடைபெறவேண்டும். அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பது சட்ட விரோதமாகும். இந்த புகைப்படத்தை அகற்றுவதுடன், இனிவரும் காலங்களில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் புத்தகங்கள், பைகள், லேப்டாப் பைகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறாமலும் தடுக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து, மனுதாரரின் புகார் மனுவின் அடிப்படையில் தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் பரிசீலனை செய்து தகுந்த முடிவினை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். 

பின்னர், அட்வகேட் ஜெனரல் சோமயாஜியிடம், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், "தமிழக அரசுக்கு வரும் கோரிக்கை மனுவை முறையாக பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பித்து விட்டால், இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இந்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க அரசு ஏன் ஆர்வம் காட்டுவதில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, "அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

மேலும், மனுவை அரசு அதிகாரிகள் பரிசீலிக்கும்போது 8-11-2014 அன்று சட்டப் பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசு ஆணையையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

 

ad

ad