புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

ஐ.நா விசாரணைத் திகதி நீடிப்பு அரசாங்கம் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணைத் திகதி திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது.

இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுவரும் நியாயமற்ற விசாரணை நடவடிக்கையை கண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கண்டனத்தை நேற்று ஐக்கிய நாடுகளின் இலங் கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நண்டியை சந்தித்து போது வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்காக ஏற்கெனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்குழு, ஒக்டோபர் 30 என்ற காலவரைறையை குறிப் பிட்டிருந்தது.

எனினும் பின்னர் காலவரையறைக்கு பின்னர் கிடைக்கும் சாட்சியங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அந்தக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சாட்சியங்கள் கிடைக்கப் பெறும் மின்னஞ்சல் முகவரியையும் விசா ரணைக் குழு ஒக்டோபர் 30துடன் மூடவில்லை.

இது நியாயமற்ற,  ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறையாகும். இதேவேளை விசாரணைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் சில உள்நாட்டு, வெளிநாட்டு தரப்புக்கள் வெற்றுக் கடதாசிகளில் பொய்யான கையொப்பங்களுடன் சாட்சியங்களை சமர்ப்பிக்க முயற்சித்தன.

இதன்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். எனவே குறித்த நியாயமற்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பீரிஸ், நண்டி யிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  

ad

ad