புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

மைலோ கிண்ண காற்பந்து போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெற்ற போட்டிகளின் படி மாவட்ட மட்டப் போட்டிக்கு தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகமும், நவாலி சென் பீற்றர்ஸ் விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றன.

போட்டிகளில் வலிகாமம் லீக் சார்பில் இளவாலை யங்ஹென்றீஸ், மானிப்பாய் றெட்ரேஞ்சர்ஸ், நவாலி சென்பீற்றர்ஸ், குப்பிளான் குறிஞ்சிக்குமரன், கல்வளை விநா யகர், தெல்லிப்பழை நாமகள், சென்யூட்ஸ், அராலி அண்ணா, வட்டுக்கோட்டை வி.க, ஜேம்ஸ், சாவற்காடு மகாத்மா விளையாட்டுக் கழகங்கள் போட்டியிட்டன.

இடம்பெற்ற போட்டிகளின் படி முதலாவது அரையிறுதியில் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகமும் இளவாலை சென்லூட்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதி யது.

ஆரம்பத்திலிருந்தே போட்டியை கட்டுக்குள் வைத்திருந்த தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகம் அதிரடியாக 2 கோல்களைப் போட்டது.

பதிலுக்கு இளவாலை சென்லூட்ஸ் விளையாட்டுக் கழகம் கோல் போட முயற்சித்து அதன் பலனாக 1 கோலையே பெற முடிந்தது.

இதனால் 2:1 என்னும் கோல் கணக்கில் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் நவாலி சென் பீற்றர்ஸ் விளையாட்டுக் கழகமும் அராலி ஜேம்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதியது.

ஆரம்பத்திலிருந்தே போட்டியை கட்டுக்குள் வைத்திருந்த நவாலி சென் பீற்றர்ஸ் விளையாட்டுக் கழகம் அதிரடியாக 2 கோல்களைப் போட்டது.

பதிலுக்கு அராலி ஜேம்ஸ் விளையாட்டுக் கழகம் கோல் போட முயற்சித்தும் கொலெதனையும் பெற முடியவில்லை.

இதனால் 2:0 என்னும் கோல் கணக்கில் நவாலி சென் பீற்றர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.  
 

ad

ad