புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

மக்கள் கருத்தின் பின்பே கூட்டமைப்பின் முடிபு மாவை. எம்.பி தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முக்கியமாக மக்களின் அபிப்பிராயத்தை கேட்டறிந்த பின்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானத்  தினை எடுக்கும் எனவும் இது தொடர்பாக ஆராய்வதற்கு இன்று கொழும்பில் அக்கட்சியின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வலம்புரிக்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கு இன்று கொழும்பில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின்; தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர்.

இக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் தமிழ் பேசும் மக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்கு தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும்.

அது மட்டுமின்றி வடக்கு கிழக்கிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் சர்வ மத தலைவர்கள், மாகாணசபை மற்றும் உள்ராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் அபிப்பிரா யங்களும் அறியப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு இன்னும் சமர்ப்பிக்கப்படா நிலையில் இது தொடர்பாக உடனடியாக எந்தவிதமான முடிவினையும் எடுத்துவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்
.

ad

ad