புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும்மகிந்தவின்  பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை- இந்திய தூதரக அதிகாரிகள் தகவல்
தெரிவித்துள்ளனர்.
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் இலங்கைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி மகிந்தவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து, மீனவர்களின் பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
விடுவிக்கப்பட்ட மீனவர் 5 பேரும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மீனவர்களை தமிழகம் அழைத்துவர இந்திய வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மகிந்தவின் பொதுமன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுதலை
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும் இன்று பொதுமன்னிப்பின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட அவர்கள் ஐவரும் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் இவர்கள் ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டதாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்கள் 2011ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களுக்கு கடந்த மாதம் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் இவர்கள் தொடர்பில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்தே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் இவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டதாக மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எமர்சன், பி.அகஸ்டியஸ், கே.பிரசாத், ஆர். வில்சன் மற்றும் ஜே. லாங்லெட் ஆகியோரே விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களாவர்.
இவர்களின் விடுதலை தொடர்பில் தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad