புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014



இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை
கொல்கத்தா அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி.

இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ். எல்) காற்பந்து போட்டி கடந்த மாதம் 12ஆம் திகதி தொடங்கியது.

இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ் வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளி கள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்தப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அட்லெடிகா கொல்கத்தா அணி முதல் இடத்தில் இருந்து வந்தது.

முதல் முறையாக அந்த அணியை 2ஆவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளிவிட்டு தற் போது சென்னையின் எப்.சி. முதல் இடத்தை பிடித்துள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த 36 ஆவது ‘லீக்’ ஆட்ட த்தில் சென்னை எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை தோற்கடித்தது.

சென்னை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளுமே 4 வெற்றி, 4 சமநிலை, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று சமநிலையில் உள்ளன. இதேபோல கோல் வித்தியாசத்தில் (+5) சமமாகவே உள்ளது.

ஆனால் கொல்கத்தாவை விட சென்னையே அதிக கோல் அடித்துள்ளது. சென்னை அணி 17 கோல்களும், கொல்கத்தா அணி 12 கோல்களும் அடித்துள்ளன. இதன் காரணமாகவே சென்னை அணி முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, புனே ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடனும், நார்த் ஈஸ்ட் யுனைடட் 10 புள்ளியுடனும், கோவா 9 புள்ளியுடனும், டிடல்லி டைனமோஸ் 7 புள்ளியுடனும் உள்ளன.

கொச்சியில இன்று நடைபெறும் 37ஆவது ‘லீக்’ ஆட்டத்தில் கொல்கத்தா அட்லெடிகோ- கேரளா பிளா ஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் கொல்கத்தா வெற்றி பெற்றாலோ அல்லது சமநிலை செய்தாலோ முதல் இடத்துக்கு மீண்டும் முன் னேறும். 

ad

ad