புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014



ஜனாதிபதி அவர்களே நான் உங்களை எதிர்க்கவில்லை! பிரச்சார மேடையில் மைத்திரிபால
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவோ தனிப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகளின்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம், ஊழல், வீண்விரயம் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராகவே தான் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் பொது வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல கட்சிகளை இல்லாமல் செய்து விடுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவையில் இன்று தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே நான் உங்களை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை. உங்கள் குடும்பத்தை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை.
நாட்டில் அதிகரித்துள்ள இலஞ்சம், ஊழல், வீண்விரயம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சி என்பவற்றையே நான் எதிர்க்கின்றேன்.
மகிந்த ராஜபக்ஷ நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழிக்க தயாராகி வருகிறார். அவர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் தரைமட்டமாக்கி விடுவார்.
நான் அனைத்தையும் அறிந்திருக்கின்றேன். எனக்கு தெரிந்த விடயங்களை நான் எதிர்காலத்தில் கூறுகிறேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
தமது உயிரையும் அர்ப்பணிக்க தயார்- மைத்திரிபால
பொலன்நறுவை மக்களுக்காக தமது உயிரை அர்பணிக்க தயார் என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் இன்று மைத்திரிபாலவின் முதலாவது பிரசாரக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதன்போது உரையாற்றிய மைத்திரிபால,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கம் இலங்கை மக்களுக்காக எதனை செய்தது என்று கேள்வி எழுப்பினார்.
மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாhதிபதியானால் அவர் ஒரு சர்வதிகாரியாகவே மாறுவார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் பதவிக்கு வந்தால் விவசாயிகளின் ஒய்வூதியத்தை உயர்த்தப்போவதாக குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் தம்மை கொலை செய்ய முயற்சித்தனர். எனினும் அரசாங்கம் தம்மீது புலிமுத்திரைக்குத்த முயற்சிப்பதாக மைத்திரிபால தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் ஊவா மாகாணசபை, எதிர்க்கட்சியின் கைக்குள் வந்துவிடும் என்று குறிப்பிட்டார்.

ad

ad