புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை இராணுவப் பேச்சாளர் அறிவிப்பு
மாவீரர் தினத்தை நடத்த அனுமதி வழங்கப்படாது என இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழீழ மாவீரர் நாள் தமிழ் மக்கள் வாழும் இடமெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு.

மாவீரர் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ தீவிரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய நிகழ்வுகளை நாம் தடுத்து நிறுத்துவோம்.

தீவிரவாதத்தை போற்றும் எந்த நிகழ்வின் மூலமும் அமைதிக்குப் பங்கம் ஏற்பட விடமாட்டோம்.

இத்தகைய நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் தடுத்து நிறுத்துவதற்காக மேலதிக கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ளதாகவும், படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை.

பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளில் படையினர் தலையிடுவதில்லை. பல்கலைக்கழகத்தை மூடுவதா, இல்லையா என்பதை உயர்கல்வி அமைச்சே  தீர்மானிக் கின்றது என்றும் மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad