புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

ஆளுநர் வெற்றிக் கிண்ண உதைபந்து விநாயகர்,யங்யஹன்றீஸ் வெற்றி
வலிகாமம் காற்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் ஆளுனர் வெற்றிக்கிண்ண காற்பந் தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இப் போட்டிகள் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதா னத்தில் இடம்பெறவுள்ளன.

வலிகாமம் காற்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட அணிகள் இப் போட்டிகளில் கலந்துகொள்கின்றன.

இடம்பெற்ற போட்டிகளின் படி.
அராலி அண்ணா விளையாட்டுக் கழகமும் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழகம் 1:0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக் கழகமும் சாவற்காடு மகாத்மா விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல்களெதனையும் பெறவில்லை.

சமநிலைஉடைப்பு தண்ட உதை வழங்கப்பட்ட போது அதனை தமக்கு சாதகமாக்கிய இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக் கழகம் 3:2 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறின
ர்

ad

ad