புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2014

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை - பி.ராஜதுரையும் ஐ.தே.கவில் சங்கமம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணியான பி.ராஜதுரை கடந்த பொதுத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றிற்குத் தெரிவானார்.
அதன்பின்னர் இ.தொ.கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டார்.
எனினும் தற்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையுடனும் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை- பி.இராஜதுரை 
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை எனும் அடிப்படையிலேயே நான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நான் 2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் போட்டியிட்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன்.
2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் ஒவ்வொரு தோட்ட தொழிலாளிக்கும் காணி உரிமை பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச் காணியும் அங்கு தனியான வீடு அமைத்து கொடுப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை தூரநோக்கு என்ற அடிப்படையிலும் இந்த கருத்து கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று 10 வருடங்களாக மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த நாட்டை ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும் கூட இதுவரையும் எந்த தோட்டத்திலும் தோட்ட தொழிலாளிக்கு காணி உரிமை பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச் காணி வழங்கப்படவில்லை. அத்தோடு தனி வீடு என்கிற கருத்து இன்றும் கனவாகவே இருக்கின்றது.
வரவு செலவு திட்டத்திலும் தோட்ட தொழிலாளிகள் தொடர்பாக முறையான முன்மொழிகள் இடம்பெறவில்லை.
இதனால் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை எனும் அடிப்படையிலேயே நான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டேன் என எம்மோடு தொலைபேசியில் நடந்த விஷேட கலந்துரையாடலில் தெரிவித்தார்.
ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவி எனக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நான் தோட்ட தொழிலாளிகள் தொடர்பாக கூறிய கோரிக்கைகளுக்கு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்கியதால் நான் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்தேன் என மேலும் தெரிவித்தார்.

ad

ad