புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கூற வெட்கமாக உள்ளது! சந்திரிக்கா

மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இங்கு மேலும் கூறியதாவது,
9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மட்டுமல்ல பல காரணங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, அது இங்கு முக்கியமில்லை.
கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்களுக்கு இடமாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுகின்றன.
பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர்.
ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன். எந்த பதவியும் தேலையில்லை, என்றார்.

ad

ad