புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

பொதுவேட்பாளர் யாராக இருந்தாலும் தேர்தலில் எமக்கு சவால்கள் கிடையாது-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

எதிரணியினர் யாராக இருந்தாலும் வெற்றிபெறுவது மஹிந்த ராஜபக்ஷவே
நாட்டுத் தலைவரை மக்கள்
ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதியென மக்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக யார் களமிறங்கினாலும் தேர்தலில் எமக்கு சர்ச்சையோ சவாலோ இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று அறிவித்தார்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருக்கு “ஐயோ பாவம்” எனக் கூறுவதனைத் தவிர எம்மிடம் வேறுபதிலில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தால் அதில் பல விதமான அனுபவங்கள் எமக்கு உண்டு. அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டு வெவ்வேறு திசைகளில் பயணம் செய்தனர். இறுதியில் சிலர் மீண்டும் எம்மிடம் வந்து சேர்ந்தனர் பலர் அரசியலில் காணாமலே போயினர்.
எது எவ்வாறானாலும் ஒரு அரசியல் கட்சிக்கு முக்கியமானது கொள்கையாகும். அத்தகைய உறுதியான கொள்கையுடைய அரசியல்வாதிகளும் உறுப்பினர்களும் இருக்கும் வரை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினை அசைக்க முடியாதெனவும் அமைச்சர் தெரிவித்தார். தலைமைத்துவத்தின் முக்கிய பண்பு எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுப்பதாகும். அந்த வகையில் ஜனாதிபதி இம்முறையும் வெற்றி பெறுவது உறுதியென்பதுடன் வரலாற்றில் பிரச்சினைகளை தோற்கடித்து கட்சியை பாதுகாத்த மக்கள் தொடர்ந்தும் எம்முடனேயே இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளரும் சரத் பொன்சேக்கா போன்று தனிமைப்பட போவதாக சூளுரைத்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொதுவேட்பாளர் தான் எடுத்த இத்தீர்மானம் குறித்து நிச்சயமாக மனம் வருந்துவார். எது எவ்வாறானாபோதும் அவருக்கு தேவையான மூளையை எம்மால் பெற்றுக் கொடுக்க முடியாதல் லவா? என்றும் அமைச்சர் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் ஒருகாலமும் ஜனாதிபதியாகத் தெரிவாக மாட்டார் என்பதனை நன்கு அறிந்து வைத்துள்ளத னாலேயே தனது தலைமைத்துவ பதவியை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதுவரைக் காலமும் பொதுவேட்பாளரை தேடி வந்தனர்.
ஐ.தே.க வுக்குள் இருக்கும் எந்தவொரு உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மோதிபார்க்குமளவுக்கு முட்டாள்கள் இல்லை. மேதினால் வெற்றி கிட்டாது என்பதனை அவர்கள் அறிவார்கள். எனவே தான் பிற கட்சிகளி லிருந்து பொது வேட்பாளரை கடன் வாங்க வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட் டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு வகையான நடனங்களை ஆடி வருகின்றனர். 1959 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவை பெளத்த மதகுரு ஒருவருக்கூடாக கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் சேனாதிபதியையும் இராணு வத் தளபதியையும் மோத வைத்தவர்கள் இன்று புதிய சதித்திட்ட மொன்றை தீட்டியுள்ளனர்.
இவ்வாறான திட்டங்களைத் தீட்டி காலத்தை கடத்தப் பார்க்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. இலங்கையின் வரலாற்றில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்ப தென்பது சாதாரணமானது. ஆனாலும் எதிர்வரும் ஆண்டில் எமது தற்போதைய தலைவரே மீண்டும் ஜனாதிபதியாவார். இதற்காக நாம் அர்ப்பணிப்புடன் சேவை யாற்றுவோமெனவும் அவர் கூறினார்.

ad

ad