புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
 
இன்று காலை 10.30 மணியளவில்  யாழ்.சிறைச்சாலைக்கு முன் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி  ஸ்ரீதர் திரையரங்கில் முடிவடைந்தது.
 
 
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவருடன் இலங்கை மீனவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழக மீனவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டனர்.இதேவேளை விடுவிக்கப்படாத இலங்கை மீனவரின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.
 
இதில் குருநகரை சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்ரியன்(வயது 38) மற்றும் ஞானப்பிரகாசம் துசாந்தன் ( வயது 28)
ஆகிய இரண்டு மீனவர்களும் மண்டைதீவினை சேர்ந்த கிறிஸ்துராசா கில்மெட்ராஜ் (வயது 25) எனும் மீனவருமாக
உள்ளுர் மீனவர்கள் மூவர் கைதாகி தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் 
அடைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களது குடும்பங்கள் மற்றும் ஊர்மக்கள் ஆகியோருடன் மீனவ அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அவர்களது
விடுதலையை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம் 

ad

ad