புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

திக்கம் வடிசாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி; சீவரத்தினம் 
திக்கம் வடிசாலையில் தேக்கமடைந்துள்ள மதுசாரத்தினை விற்பனை செய்வதற்கு என வடமராட்சி பனை , தென்னை வள கூட்டுறவு சங்கங்களின்
கொத்தணிக்கு மீண்டும்   ஒப்பந்த அடிப்படையில்  வடிசாலையினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திக்கம் வடிசாலையினை நடாத்துவதிலும் கொடுப்பனவுகளை வழங்குவதிலும் கடந்த பல மாதங்களாக பாரிய பிரச்சினை நிலவி வந்தது.

எனினும் தற்போது அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி முன்னர்  அனுமதி பெற்று வடிசாலையினை நடாத்தி வந்த வடமராட்சி பனை , தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் கொத்தணிக்கு  மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய அனுமதியும் தேக்கமடைந்துள்ள மதுசாரத்தை விற்பனை செய்வதற்கே ஆகும். அதன்படி தற்போது 97ஆயிரம் மில்லி லீற்றர் மதுசாரம் நிலுவையில் உள்ளது. எனவே இவற்றை விற்பனை செய்வதற்கு குறைத்தது 4 மாதங்களுக்கு மேல் ஆகும்.

எனவே அது வரைக்குமான ஒப்பந்தமே தற்போது பனை அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள மதுசாரம் வடக்கு மாகாணத்தில் உள்ள நிலையங்களுக்கும் , எம்முடன் இணைந்துள்ள தென்னிலங்கையில் உள்ள ஒரு நிறுவனத்தினூடாகவும் விற்பனை செய்யப்படும்.

தற்போது 750 மில்லிலீற்றர் மதுசாரம் 630 ரூபாவுக்கும், 375 மில்லிலீற்றர் மதுசாரம் 310 ரூபாவிற்கும் ,180 மில்லிலீற்றர் மதுசாரம் 160 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை திக்கம் வடிசாலை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நவீன மயமாக்கப்பட்ட வடிசாலையாக மாற்றுவதுடன் வடிசாலையில் தங்கி வாழும் மக்களிடம் வடிசாலையினை வழங்குவதே எமது இலக்கு என்றும் புதிய உற்பத்திகளுக்கு புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்படும் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.

ad

ad