புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

இலங்கை உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது இந்தியா தெரிவிப்பு
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என அந்நாடு தெரிவித்துள்ளது.

பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பில் சுதந்திரமான தீர்மானங்களை எடுக்கும் உரிமையை இந்தியா மதிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளரான எம்.எஸ். அக்பர் கூறியுள்ளார்.

இந்தியாவின் புதிய பிரதமரான மோடியின் பதவியேற்பில் பங்கு கொள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டதன் மூலம் இலங்கை சம்பந்தமாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு எப்படியான நல்லெண்ணத்தை கொண்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளதாகவும் அக்பர் கூறியுள்ளார்.

இலங்கை, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருவது தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அக்பர், உலகில் எந்த நாடும் ஒரு நாட்டுடன் மாத்திரம் தொடர்புகளை வைத்து கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் பிரிவினை வாதத்திற்கு உதவும் நாடுகள் சம்பந்தமான இந்தியாவின் கொள்கை வேறுவிதமாக இருக்கும்.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நல்லெண்ணத்தை வளர்ப்பதன் மூலம் இரு நாடுகளின் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் எனவும் அக்பர் நம்பி க்கை வெளியிட்டுள்ளார்.     

ad

ad