புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2014

மாவீரர் தினம் இன்று*வீதிகள் எங்கும் இராணுவம். *ஆலயங்களில் பூசைக்குத் தடை. *புலனாய்வு முற்றுகையில் கட்சி அலுவலகங்கள். *சாவு வீட்டு வெடிக்கும் இராணுவம் ஓட்டம். *பதற்ற நிலையில் வடக்கு.
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு முழுவதும் இராணுவமும் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் குவிக்கப்பட்டு தீவிர கண் காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

போர்க் காலங்கள் போல் வீதிகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு வீதிகளில் செல்வோர் சோதனைக்குட்படுத்தப்பட்டும் உள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின்  மாவீரர் வாரம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பித்து இன்றையதினம் மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி, பலாலி வீதி, ஏ9 வீதி, கஸ்தூரியார் வீதி, மானிப்பாய்  வீதி, பொன்னாலை வீதி என பிரதான வீதிகள் உட்பட அனைத்து வீதிகளும் இரா ணுவ ரேந்துகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு இடங்களிலும் ஆகக்குறைந்தது இரு புலனாய்வாளர்களாவது நிலை நிறு த்தப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை இராணுவரோந்து சுழற்றி முறையில் இடம் பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலுள்ள கட்சி அலுவலகங்கள் குறிப்பாக பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம், மாட்டீன் வீதி யிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகம், கிளிநொச்சியிலுள்ள அறிவகம் உள்ளிட்ட கட்சி அலுவலகங்கள் முன்பாக புலனாய்வுப் பிரிவினர்கள் மற்றும் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

யாழில் உள்ள ஆலயங்களிற்கு சென்ற இராணுவத்தினர் ஆலயங்களில் மணி அடிக்க வேண்டாம், தீபம் காட்ட வேண்டாம் என பூசகர்களிற்கு கூறியுள்ளனர்.

நித்திய பூஜைகளினை செய்வதற்கு ஆலயங்களிற்கு சென்ற பூசகர்களினை இராணு வத்தினர் திருப்பியனுப்பி சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நேற்றையதினம் பிள்ளையார் சதுர்த்தியயன்பதனால் பிள்ளையார் ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இவற்றினையும் இராணுவத்தினர் தடை செய்தமையினால் சமைத்த உணவுகளும் ஆலயங்களில் தேங்கிக் கிடந்தன.

சாவகச்சேரி, பளை, கச்சாய் ஆகிய இடங்களிலுள்ள விநாயர் ஆலயங்களிற்கே இந்த கதி ஏற்பட்டுள்ளது.

பெரிய ஆலயங்கள் அனைத்தும் இராணுவ முகாம்கள் போல் ஆலயங்களினை சுற்றி இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சித்தன்கேணி, வடலியடைப்புப் பகுதியில் மரண வீடு ஒன்று நேற்று நடைபெற்றது.

இறந்தவரை அடக்கம் செய்வதற்கு வீதி வழியாக எடுத்துச் செல்லும் போது வெடி கொளுத்திக் கொண்டு சென்றனர்.

அதன் சத்தத்தினை கேட்ட இராணுவம் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். வரும் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்கள் என்று சிந்தனையில் வந்தவர்கள் இறந்தவரின் உடல் அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்றதைக் கண்ட பின்பே அமைதியடைந்தனர்.

மேலும் நேற்று 26-ம் திகதி தமிழீழ விடு தலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினத்தை வடக்கு மக்கள் கொண்டாடிவிடக் கூடாது என்ற நோக்கில் விஸ்தரிக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு நிலை மைகள் மாவீரர் தினமான இன்று மேலும் அதிகரித்த நிலையில் காணப்பட வாய்ப்புள்ளது.

இதனால் வடக்கு முழுவதும் இராணுவ அச்சம் கலந்த பதற்ற நிலைமை நீடித்து காண ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    

ad

ad