புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014



மங்கள சமரவீரவின் இரண்டாம் காய்நகர்த்தல் திட்டம்   சற்று முன்னர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.
இதன் பிரகாரம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல் மாகாண சபை ஆளுங்கட்சியிடமிருந்து பறிபோகவுள்ளது.

ஹிருணிக்கா உள்பட ஐந்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கட்சி தாவும் முடிவை சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொது எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னரே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் உதய கம்மன்பில மேல்மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஹிருணிக்கா பிரேமச்சந்திர, பைரூஸ் ஹாஜியார், ஒரு தமிழ் உறுப்பினர் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஹிருணிக்கா கட்சி தாவப் போகும் முடிவு தெரிய வந்தவுடன் இன்று காலை முதல் நாமல் ராஜபக்ச மீண்டும் ஹிருணிக்காவை நெருங்கிவர கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் மூலம் ஹிருணிக்காவை ஆளுங்கட்சிக்குள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார்.
இதற்கிடையே புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் இன்று அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சி தாவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத புலனாய்வுச் சேவை தொடர்பில் ஜனாதிபதி அவர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளார்.

ad

ad