புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

ஆளும் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்க தூதரகங்கள் முயற்சி 
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை எதிர்க்கட்சியில் இணைப்பதற்கு இரண்டு நாடுகளின் தூதரகங்கள் முயற்சித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு தூதரகங்கள் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல வைக்க முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்கும் பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் மொத்தப் பணம் அல்ல எனவும் ஒரு பகுதி பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள எவ்வளவு பணம் தேவை என்ற பேரம் பேசுதல் அடிப்படையில் ஆளும் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வெளிநாடுகளின் பிரபலமான உளவுப் பிரிவினரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதல் கட்டமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

ad

ad