புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

வடமாகாண சபைக்கு கடிதம் அனுப்பிய முல்லை.அரச அதிபர்! கொதித்தெழுந்த சபை உறுப்பினர்கள் - இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்துடன் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு ஒரு கடிதத்தின் மூலம் இணைக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டே இணைக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் வடமாகாண சபைக்கு எழுத்துமூலம் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பிரதேச செயலர் பிரிவு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு சட்டபூர்வமான இணைக்கப்படவில்லை.
அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர்கள் சீற்றமடைந்த சம்பவம் மாகாண சபையில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
வடமாகாண சபையில் 19வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது மேற்படி அரசாங்க அதிபரின் கடிதம் சபையில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துப் பேசிய மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அன்டனி ஜெயநாதன் ஆகியோர் அரசாங்க அதிபரின் கூற்றை ஏற்க மறுத்துள்ளனர்.
விடயம் தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில்,
கடந்த 9ம் மாதத்தின் முற்பகுதியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கடிதம் மூலமே இணைக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் வழங்கிய பதில் வழங்கியிருந்தார்.
ஆனால் இன்று 2013ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அதைக் குறிக்கும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இணைத்ததாகவும் மாகாண சபைக்கு கடிதம் எழுதியிருக்கின்றார்.
இதனை நாம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. அங்கே சிங்கள மக்கள் வாழும் பகுதி எங்களுடைய தாய்நிலம், அது இன்று சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன.
அந்த நிலத்திற்கான ஆவணங்களை இன்றும் நாங்கள் வைத்திருக்கும் நிலையில் சூனிய பகுதி என கூறிக்கொண்டு சிங்கள குடியேற்றம் செய்தவர்கள் அங்கே வாழ்கிறார்கள்.
எனவே இதனை நாம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அது சட்டபூர்வமற்ற ஒரு பகுதியே அதற்கு வடமாகாண சபையிலிருந்து எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் நாங்கள் செய்யமாட்டோம் என சபையில் சினங்கொண்டு பேசினர்.

ad

ad