புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

மகிந்தவுக்கு பிடித்தது சனி.ஆட்சி கவிழ்கிறது . தோல்விகளும் சோதனைகளும் வரிசையாக காத்திருக்கின்றன எதிரிகட்சி தாவும் பாராளுமன்ற அங்கத்தவர் பட்டியல் இதோ .துரோக்கிகள் கதை என்னாகும் 
ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவ காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் சற்று முன்னர் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் ஊடாக எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதில் தற்போதைக்கு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ளது.
மாவட்ட அடிப்படையில் கட்சி  தாவ  காத்திருப்போரின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டம்
1. மைத்திரிபால சிறிசேன
2. சிறிபால கம்லத்
அநுராதபுரம் மாவட்டம்
3. துமிந்த திசாநாயக
குருநாகல் மாவட்டம்
4.எஸ்.பி.நாவின்ன
5. நில்வலா விஜேசிங்க
 6. சாலிந்த திசாநாயக்க
7. நிரஞ்சன் விக்கிரமசிங்க
அம்பாறை மாவட்டம்
பைசல் காசிம்
எம்.எச்.எம்.ஹரீஸ்
பதுளை மாவட்டம்
10. ரோஹண புஷ்பகுமார
காலி மாவட்டம்
11. பியசேன கமகே
12. ரமேஷ் பத்திரன (முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் புதல்வர்)
13. குணரத்தின வீரக்கோன்
கம்பஹா மாவட்டம்
14. சரத் குமார குணரத்ன
15. அத்துரலியே ரத்ன தேரர் (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)
16. வசந்த சேனநாயக்க (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)
களுத்துறை மாவட்டம்
17. ரெஜினோல்ட் குரே
18. ராஜித சேனாரத்தின
19. விதுர விக்கிரமநாயக்க
20. ரத்னசிறி விக்கிரமநாயக்க
கண்டி மாவட்டம்
21. ரவூப் ஹக்கீம்
மொனராகலை மாவட்டம்
22. சுமேதா ஜயசேன
மாத்தளை மாவட்டம்
23. ஜனக பண்டார தென்னகோன்
நுவரெலியா மாவட்டம்
24. நவீன் திசாநாயக்க
25. சீ.பி.ரத்நாயக்க
இரத்தினபுரி மாவட்டம்
26. சனீ ரோஹண வன்னி
27. ரிசாத் பதியுதீன்
கொழும்பு மாவட்டம்
28. பாட்டலி சம்பிக்க ரணவக்க (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)
தேசியப்பட்டியல்
29. ஹசன் அலி
30. எம்.எஸ்.எம். அஸ்லம்
31. அசல சுரங்க ஜகொட
32. ரஜீவ விஜேசிங்க
மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவும் தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாகவும் இன்னும் சிலர் மதில்மேல் பூனைகளாக இருந்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad