புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஜனாதிபதி மகிந்தவை காப்பேன் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மற்றும் அவரது குடும்பத்தை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பாதுகாப்பேன் என எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் ஜனாதிபதி           
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த சவாலாக இருந்தாலும் தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் அவருக்காக குரல் கொடுக்க போவதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தால், அவரை சர் வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போவதாக வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.

நான் வெற்றி பெற்ற பிறகு, மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பம், பாதுகாப்புச் செயலாளர், அல்லது பயங்கரவாத பிடியில் இருந்து நாட்டை மீட்ட முப்படையினர் உட்பட அனைவரையும் புலிகளுடன் சம்பந்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாதுகாப்பேன் என்பதை தெளிவாக கூறி உறுதியளிக்கின்றேன் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத் தால் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவேன்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த முடியும்.

எனது கையில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்தால் நான் நிச்சயமாக பொறுப்புக் கூறலை வெளிப்படுத்துவேன். என அவர் கூறினார்.

இந்த ஊடக மாநாட்டில் கரு ஜெயசூரிய, ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர், ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். 

ad

ad