புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

ஆஸி.யை கலங்கடித்த இந்தியா 
 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக விளையாடியுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்குபெறும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது.
 
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4ம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
 
அதன்படி அவுஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணியுடன் இந்திய அணி மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்கியது.
 
அவுஸ்திரேலிய லெவன் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
 
52 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அவுஸ்திரேலயா லெவன் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசி அவுஸ்திரேலிய லெவனுக்கு தொடக்கத்தில் நெருக்கடி கொடுத்தனர்.
 
தொடக்க வீரர் ஷார்ட் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அணித்தலைவர் டர்பனர் 29 ஓட்டங்களிலும் ஸ்டீவென்ஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் வருண் ஆரோன் பந்தில் ஆட்டமிழந்தனர்.
 
பின்னர் ஸ்மித் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க நீல்சன் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினர். இதனால் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் அணி 71.5 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு சுருண்டது.
 
இந்திய பந்து வீச்சாளர்களில் வருண் ஆரோன் வேகமாக வீசினார் பந்துகள் எகிறின. இதனால் 3 முன்கள வீரர்களின் விக்கெட்டுகளை அவர் சாய்த்தார்.
 
புவனேஷ் குமார்,முகமது ஷமி மற்றும் கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார். முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.
 
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு அருமையான முதல் தினமாக அமைந்தது. 5 பிடியெடுப்பு ஒரு ஸ்டம்பிங் என்று 6 பேரை வீழ்த்துவதில் பங்களிப்பு செய்துள்ளார்.
 
பின்னர் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் முடிவதற்கு முன்பாக 16 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
முரளி விஜய் 32 ஓட்டங்களுடனும், புஜாரா 13 ஓட்டங்களுடனும் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ad

ad