புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

போர்முலா கார்பந்தயம்; ஹமில்டன் சம்பியன் 
போர்முலா கார்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹமில்டன் முதலிடத்தைப் பிடித்து சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 
போர்முலா கார்பந்தயத்தின் 19 ஆவது மற்றும் இறுதிச்சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அபுதாபியிலுள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில்  இடம்பெற்றது. பந்தய தூரம் 305.470 கிலோ மீற்றர் ஆகும். 
இதில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் சீறிப் பாய்ந்தாலும் பட்டம் வெல்லும் வாய்ப்பில் மல்லுகட்டிய இங்கிலாந்தின் லுவிஸ் ஹமில்டன் (மெர்சிடஸ் அணி), ஜெர்மனியின் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) இடையே தான் போட்டி காணப்பட்டது. 
தகுதிச் சுற்றின் அடிப்படையில் ராஸ்பெர்க் முதல் வரிசையிலும், ஹமில்டன் 2 ஆவது வரிசையில் இருந்தும் காரை இயக்கினர். ஆனால் பாதியில், ராஸ்பெர்க்கின் காரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர் பின்தங்க நேரிட்டது. இதனால் ஹமில்டன் சிக்கலின்றி வெற்றி பெற்றார். இவர் 2 வது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை வெல்கிறார் 
அவர் பந்தய தூரத்தை 1 மணி 39 நிமிடம் 02.61 வினாடிகளில் கடந்து அசத்தினார். வெற்றிக்குரிய 50 புள்ளிகள் அவருக்கு கிடைத்தன. இந்த சீசனில் ஹமில்டன் பதிவு செய்த 11 ஆவது வெற்றி இதுவாகும். பிரேசில் வீரர் பெலிப் மாசா 2 ஆவதாக வந்தார்.

ad

ad