புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

யாழ். பேரூந்து நிலையத்தில் விரைவில் முறைப்பாட்டுப் பெட்டி 
பயணிகளது நன்மை கருதி யாழ். நகர் பேரூந்து நிலையம் மற்றும் கோண்டாவில் யாழ். சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் விரைவில் முறைப்பாட்டுப்பெட்டி
பொருத்தப்படவுள்ளதாக சாலை முகாமையாளர் குலபாலச்செல்வம் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது,

யாழ். நகர பேரூந்து நிலையத்தில் முன்னர் முறைப்பாட்டுப் பெட்டி இருந்தது. பின்னர் இடம்பெற்ற நாட்டு யுத்த சூழல் காரமாக இடம்பெயர்வுகளால் முறைப்பாட்டுப் பெட்டி இல்லாது போய்விட்டது.

தற்போது  பேரூந்து நிலையத்தில் முறைப்பாட்டுப் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பிரயாணம் செய்வதில்  அரச பேரூந்து சார்பில்  ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் அதில் குறித்துக் கொள்ள முடியும்.

எனினும் அதனை பிரயாணிகள் கவனத்தில் கொள்வதாக இல்லை. அத்துடன் பதிவேட்டில் எழுதுவதற்கு பிரயாணிகளுக்கும் நேரம் போதாது உள்ளது. எனவே அவற்றை இலகுவாக்கும் வகையில் பயணிகள் தங்களது முறைப்பாட்டினை நேரடியாக முறைப்பாட்டுப் பெட்டியிலேயே போட முடியும்.

இவ்வாறு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளாந்தம் பரிசீலிக்கப்படும். உடனடித் தீர்வு காணக்கூடிய விடயங்கள் எனினின் தீர்வு விரைவாக கிடைக்கும். இல்லையேல் தாமதித்தாலும் பயணிகளது முறைப்பாடு குறித்து கவனம் செலுத்தப்படும்.

இதில் சாரதி, நடத்துநர் தொடர்பில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினை, மிகுதி பணம் வழங்காதமை தொடர்பிலும், தரிப்பிடங்களில் ஏற்றிச் செல்லாமை  உள்ளிட்ட அரச பேரூந்து தொடர்பிலான அனைத்து முறைப்பாடுகளையும் வழங்க முடியும்.

எனவே யாழ். பேரூந்து நிலையத்திலும் யாழ். சாலையிலும் மிக விரைவில் முறைப்பாட்டுப் பெட்டிகள் வைக்கப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad