புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

லிங்கா படத்தில் வக்கீல்களுக்கு எதிரான காட்சியா? புதிய புகாரால் ரஜினி அதிர்ச்சி
ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இப்படம் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. 

முல்லை பெரியாறு அணையை அடிப்படையாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து கர்நாடகாவில் அணைக்கட்டு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட்டது. ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தபோதும் சர்ச்சை எழுந்தது. எல்லா பிரச்னைகளையும் சமாளித்து படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இதற்கிடையில் இப்படம் ‘முல்லை வனம் 999‘ என்ற கதையை காப்பி அடித்து எடுத்துள்ளதாக மதுரை ஐகோர்ட் கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதற்கு ரஜினியும், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் இப்படத்தை சென்சாருக்கு திரையிடுவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் திங்கட்கிழமை படத்தை சென்சாருக்கு திரையிடுவதற்கான வேலையில் இயக்குனரும் பட குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் படத்தில் நீதிமன்றம் மற்றும் வக்கீல்கள் பற்றி விமர்சித்து காட்சிகள் வருவதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும், படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் வக்கீல் நன்மாறன் சென்சார் குழுவிடம் மனு கொடுத்துள்ளார். 

இது குறத்து வக்கீல் நன்மாறன் கூறும்போது, படம் திரைக்கு வந்த பிறகு பிரச்னை கிளப்புவதில் அர்த்தம் இல்லை. லிங்கா படத்தில் நீதித்துறை சம்பந்தமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதை இப்போதே நீக்கிவிட்டால் பெரும் பிரச்னையை தவிர்க்கலாம். அந்த எண்ணத்துடனே இந்த மனுவை அளித்துள்ளேன் என்றார்.

 இந்த புதிய சர்ச்சை பட குழுவிருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ad

ad