புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

மைலோ கிண்ண காற்பந்தாட்ட போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட் டிகள் இடம்பெற்று வருகின்றன.

இடம்பெற்ற போட்டிகளின் படி திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல்களெதனையும் பெறவில்லை.

சமநிலை உடைப்பு தண்ட உதை நாடப்பட்ட போது இதனை சாதகமாக்கிய உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் 4:3 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சக்கோட்டை சென் .சேவியர் விளையாட்டுக் கழகமும் அல்வாய் மனோகரா விளை யாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் சக்கோட்டை சென்;. சேவியர் விளையாட்டுக் கழகம் 5:0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் உடுப்பிட்டி யூத் விளையாட்டுக் கழகமும் விண்மீன் விளையாட்டுக் கழகமும் மோதின.

போட்டியை ஆரம்பம் முதலே கட்டுக்குள் வைத்திருந்த விண்மீன் விளையாட்டுக் கழகம் 1:0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக மும் கொலின்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதின.

போட்டியை ஆரம்பம் முதலே கட்டுக்குள் வைத்திருந்த உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் அடுத் தடுத்து 3 கோல்களைப் போட்டது.

பதிலுக்கு கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் கோலொன்றினைப் போட்டாலும்  போட் டியில் 3:1 என்னும் கோல் கணக்கில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

மூன்றாவது காலிறுதிப் போட்டியில் டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகமும் இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகமும் மோதின.

விறுவிறுப்பாக இடம் பெற்ற இப் போட்டியில் 2:0 என்னும் கோல் கணக்கில் டயமண் ட்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

நான்காவது காலிறுதியில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகமும் சென். சேவியர் விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் போட்டி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலகளைப் பெற்றிருந்தன.

சமநிலை உடைப்பு தண்ட உதை நாடப்பட்ட போது அதிலும் இரு அணிகளும் தலா மூன்று கோல்களைப் பெற்றன.

மேலுமொரு உதை வழங்கப்பட போது இதனை சாதக மாக்கிய கலைமதி விளை யாட்டுக் கழகம் 4:3 என் னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இடம்பெற்ற போட்டிகளின் படி.
முதல் அரையிறுதிப் போட் டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ்  விளையாட்டுக் கழகமும் வதிரி டயமண்ட்ஸ் விளை யாட்டுக் கழகமும் மோதின.

போட்டி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தன. இதனால் சமநிலை உடைப்பு தண்ட உதை நாடப்பட்ட போது அதனை சாதமாக பயன்படுத்திய உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் 4:3 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையி றுதியில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் விண்
மீன் விளையாட்டுக் கழகமும் மோதின.

இதில் ஆரம்பம் முதலே போட்டியை கட்டுக்குள் வைத்திருந்த நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் 3:0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட மட்ட மைலோ கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற
து

ad

ad