புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

சீர்குலையும் யாழ்.கலாசாரத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டுமென விருப்பம்
யாழ்ப்பாணத்தவர்களின் கலா சாரம் சீரழிந்து செல்கின்றமையினால் தான் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென விரும்புகின்றோம் என பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டவர் விசாரணை யின் போது கூறினார் என யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. பி.விமலசேன தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதியன்று மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வைத்து அதேயிடத்தினைச் சேர்ந்த வீரசிங்கம் திலக்சனன் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தினம் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களினை வைத்திருந்தார்  என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞனின் வீடும் சல்லடை போட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பினர் தேடுதல் நடத்தியதோடு வீட்டில் காணப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணனிகள் என்பவற்றினையும் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட திலக்சனை யாழில் உள்ள ரி.ஐ.டியினர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்குட்படுத்தியிருந்தனர்.

இவ் விசாரணையின் போதே அவர் யாழ்ப்பாணத்தவர்களின் கலாசார சீரழிந்து செல்வதால் அவர்களை திருத்த முயலவே விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் செயற்படவுள்ளது என துண்டுப் பிரசுரங்களினை அச்சிட முயற்சித்தோம் என தெரிவித்ததாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை இளைஞன் நேற்று முன்தினம் இரவு கொழும்பு 6 ஆம் மாடிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என வலம்புரிக்கு தெரிய வந்துள்ளது.       
      

ad

ad