செவ்வாய், நவம்பர் 25, 2014

"சுடுவோம்' துண்டுப் பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் உட்பட பல்கலை மாணவர்கள் சிலரினை சுடுவோம்  என எச்சரித்து துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டடங்களில் பரவலாக  இத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளினை மீள உருவாக்க முயல்கின்றனர், மாவீரர் தினத் தினை அனுஷ்டிக்க விடமாட்டோம் என துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டே ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் யாழ்.பல்கலையில் நேற்றைய தினம் பதற்றம் நிலவியதோடு அச்ச நிலை யும் காணப்பட்டது.