புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

சந்திரிகாவுக்கு சாதகம் பொருந்தாவிடில் சகோதரி சுனேத்திராவுக்குப் பொருந்தும்
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­ போட்டியிட முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்­ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பதை அறியும் பொருட்டு மகிந்த ராஜபக்­ உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தவுக்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள பதிலில் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ போட்டியிடலாம் என்று அறிவித்துள்ளது.

மூன்றாவது தடவையாக மகிந்த ராஜபக்­ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் அந்தத் தகைமை ஏற்புடையதாகி விடும்.

எனினும், உயர் நீதிமன்றம் அனுப்பிய கருத்துரையில் ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு இந்தத் தகைமை பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இத்தகையதொரு குறிப்புரை உயர் நீதிமன்றத்தின் முன்மொழிவில் இடம்பெற்றிரு க்குமாயின் சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை பொறுத்தவரை அவருக்கு ஈடான ஒரு வேட்பாளர் என்றால் சந்திரிகாவாக மட்டுமே இருக்க முடியும்.

ஏனெனில், இவர்கள் இருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்ற பிள்ளைகள். குந்தியின் வயிற்றில் பிறந்த கர்ணனே பாண்டவர்களுக்கு பலமான எதிரி யாகவிருந்தான்.

எனவே, மகிந்த ராஜபக்­வை எதிர் கொள்ளக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது சந்திரிகாவாக மட்டுமே இருக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

எனினும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை வெளிவராத நிலையில், ஆளுந்தரப்புக் கூட தவறான தகவல்களை வெளியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க போட்டியிடாமல் செய்வதற்கான சில ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கலாம்.

எனவே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா? என்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆராய வேண்டும்.

அவ்வாறானதொரு ஆராய்வில் உயர் நீதிமன்றின் முன்மொழிவு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகித்தறிய முடியும்.

சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியாது என்று நீதிமன்றத்தின் பரிந்துரையிருக்குமாயின் “...நெஞ்சத்துக் கோடாமை...” எவ்வாறு உள்ளதென்பதை உணரமுடியும்.

எதுவாயினும் எதிர்க்கட்சிகள் தேடுகின்ற ஒரு நல்ல பொது வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்கவாக மட்டுமே இருக்க முடியும்.

சந்திரிகாவை மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கான சகல வழிவகைகளையும் மேற்கொள்வது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.

சந்திரிகாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவது முடியாத காரியம் என்றால் அவரது சகோதரி சுனேத்திராவை பொது வேட்பாளராக நிறுத்துவது உசிதமானது.

நல்ல சாதகம்.

ஒரு சகோதரிக்கு பொருந்தவில்லை எனில் அடுத்த சகோதரிக்கு பொருத்தம் பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை.

சந்திரிகாவிற்குப் பொருந்தாவிடில் சுனேத்திராவுக்கு சாதகம் நிச்சயம் பொருந்தும். பொருத்தம் ஒரே வீட்டில் இருக்கும் போது, வேறு ஒருவரை தேடித்திரிவது அர்த்தமற்றது.

ஆகையால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒன்றில் சந்திரிகா அல்லது அவரது சகோதரி சுனேத்திரா
.

ad

ad