புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

இந்திய மீனவர்களை காக்க நேரடியாக களத்தில் இறங்கும் சுஷ்மா சுவராஜ்? - மீனவர்களின் மேன்முறையீடு வாபஸ
இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவப் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படவுள்ளது.
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட வழக்கில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை கண்டித்து தமிழக முழுவதும் மீனவ அமைப்புகள் உள்பட் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேலும் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் அதிகார பூர்வமாக மீனவர்கள் விடுதலை தொடர்பாக செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவும், மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ தலைமையில் அருளானந்தம், ராமகிருஷ்ணன், தேவதாஸ், சேசு உள்ளிட்ட தமிழக மீனவப் பிரநிதிகள் இன்று சந்திக்கின்றனர்.
இந்திய மீனவர்களின் மேன்முறையீடு வாபஸ்
போதைப்பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, இன்று (18) அம்மீனவர்களால் வாபஸ் பெறப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் மேற்படி மீனவர் பிரச்சினை தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad