புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

பாகிஸ்தான் இளைஞனின் தலை நடுவீதியில் வைத்து துண்டிப்பு தீவிரவாதிகள் வெறிச் செயல்
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு மெகர்பான் கெலாய் மற்றும் அருகில் உள்ள பள் ளதாக்கு பகுதி; பழங்குடியினர் வாழும் பகுதி பாகிஸ்தானை சேர்ந்த தெக்ரிக் -இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் லஸ்கர்-இ.இஸ்லாம் தீவிரவாத இயக்கத்திற்கும் இங்கு செல்வாக்கு உள்ளது. இந்த இரண்டு தீவிரவாத இயக்கங்களும்  இணைந்து  லஸ்கர் மக்;கள் பாக்.   தலைமையில் கைகோர்த்து பாதுகாப்பு படைகளுக்கு எதிராக தக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில்  பாதுகாப்பு படைகளை உளவு பார்த்ததாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர்  சந்தைப் பகுதியில ;நேற்று காலை பொது மக்கள் மத்தியில் தீவிரவா திகளால்  தலையை வெட்டி கொல்லப்பட்டார்.

கைபர் மாவட்டத்தில் டைரா பள்ளத்தாக்கில் மெக்ர்பான் கலெய் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

அங்குள்ள மக்களிடம் நேற்று மாலை வரை யாரும் அவருடைய உடலை அப்பு றப்படுத்தக்கூடாது என மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர்.

அரசு பாதுகாப்பு படைகள் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த மாதம்  16 ஆம் திகதி கைபர்-1 என்ற  இராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

இந்த நடவடைக்கையை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படையும், உள்ர் அரசு நிர்வாகமும் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு நேற்று முன்தினம் வரை கெடு விதித்து இருந்தது.

கெடு நீடிக்கப்பட்ட பிறகு பழங்குடியின தலைவர்கள் நாங்கள் பலமுறை பாதுகாப் பான இடங்களுக்கு எங்கள் குடும்பங்களை மாற்றி விட்டோம் என கூறினர்.

பேரழிவு மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறும் போது இந்த பகுதியில் 53,819 குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து, 64 ஆயிரத்து,960 பேர் டைரா பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதில் 2,13195 குழந்தைகளும் 77, 319 பெண் களும் அடங்குவர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச உணவு, போக்குவரத்து, அவசர கால சுகாதார சிகிச்சை வழங்கப் படுகிறது என தெரிவித்தார்.

ad

ad