புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

தேசியமட்ட வி.போட்டி யாழ்.வலயம் சாதனை
ஆசிரியர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இம் மாதம் 10,11ஆம் திகதிகளில் நுவரெலியா பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதில் யாழ். வலயம் சார்பாக 10 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன. யாழ்.வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சண் தயாளன் 56-60 வயதுப் பிரிவில் கலந்து கொண்டு ஈட்டியெறிதலில் தங்கப்பதக்கத்தையும், தட்டெறிதல் மற்றும் உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கங்கள் உட்பட 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

யாழ்.இந்துக் கல்லூரி ஆசிரியர் எஸ்.திருமாறன் 41-45 வயதுப் பிரிவில் கலந்து கொண்டு 200 மீற்றர் மற்றும் 4*100 அஞ்சலோட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கத் தையும், முப்பாய்தலில் வெண்கலப் பதக்கம் உட்பட 3 பதக்கஙகளை வென்றுள்ளார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆசிரியர் ஆர்.மிதுலா 36-40 வயதுப் பிரிவில் கலந்து கொண்டு 100மீற்றர் நிகழ்வில் தங்கப்பதக்கத்தையும், 200 மீற்றர் நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் உட்பட 2 பதக்கங்களை வென்றுள்ளார்.

யாழ். கலட்டி மெதடிஸ்த மிஷன் த.க பாடசாலை ஆசிரியர் திருமதி.ஜீ. கருணாகலா தேவி 36-40 வயதுப் பிரிவில் கலந்து கொண்டு தட்டெறிதல், ஈட்டியெ றிதல் ஆகியவற் றில் தங்கப்பதக்கம் உட்பட 2 பதக் கங்களை வென்றுள்ளார்.

ad

ad