புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

இஸ்ரேலியர் மீதான தாக்குதலை நடத்திய பலஸ்தீனரின் வீடு படையினரால் தரைமட்டம்

nஜரூசலம் எங்கும் பதற்றம்: வன்முறை
nஜரூசலத்தில் கடந்த மாதம் காரை மோதவிட்டு இருவரை கொன்ற பலஸ்தீனரின் கிழக்கு nஜரூசலத்தில் இருக்கும் குடும்ப வீடு இஸ்ரேல் பாதுகாப்பு படையி னரால் தரைமட்டமாக்கப்பட்டுள் ளது. மேற்கு nஜரூசலத்தில் ஏழு பேர் கொல்லப்பட்ட யு+த வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலுக்கு பின் பலஸ்தீனர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் வீதிகளில் மோதல் வெடித்துள்ளது.

"nஜரூசலத்தின் புகையிரத நிலை யத்திற்கு அருகில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஒரு இஸ்ரேலிய குழந்தை மற்றும் இளம் பெண்ணை கொலை செய்த தீவிரவாதியின் சில்வான் பகுதியில் இருக்கும் வீடு தரைமட்டமாக்கப்பட்டது" என்று இஸ்ரேல் இராணுவம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய அப்துல் ரஹ்மான் அல் 'லூதி அன்றைய தினமே இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த வீட்டில் நான்கு குடும்பங் கள் இருந்துள்ளன. இவர்கள் அனை வரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பொலிஸார் சூழவிருந்த அனைத்து வீடுகளில் இருந்தோரை யும் வெளியேற்றியுள்ளனர். இதன் போது குறித்த கட்டடத்துடன் அருகில் இருந்த வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டதாக குடியிருப் பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
nஜரூசலத்தில் இடம்பெற்ற ஏனைய தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களின் வீடுகளையும் தரைமட்டமாக்கும்படி இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலின் பலஸ்தீனர்க ளின் வீடுகளை தரைமட்டமாக்கும் கொள்கை கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள் ளது.
முதல்முறையாக கிழக்கு nஜரூ சலத்திலும் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு கூட்டுத் தண்டனை முறையென்று மனித உரிமை கண்காணிப்பு குழுக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இது சர்வதேச சட்டத்தில் தடுக்கப்பட்ட செயற்பாடு என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
வீடுகளை இடிப்பதற்கு எதிரான இஸ்ரேலிய குழு கடந்த ஓகஸ்டில் வெளியிட்ட அறிவிப்பில், "தண்டனை நடவடிக்கையாக இஸ்ரேல் கடந்த 2001-2005 காலப்பகுதியில் 664 பலஸ்தீனர்களின் வீடுகளை தரை மட்டமாக்கி இருக்கிறது.
இதனால் 4,182 அப்பாவி பொது மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சந்தேக நபரின் குடும்பத்தின் அயல் வீட்டார் ஆவர். வெறுமனே குற்றச்சாட்டு தொடர்பான சந்தேகத்திலே வீடுகள் இடிக்கப்படுகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில் ய+த வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடத்திய இரு பலஸ்தீனர்களின் ஊரான கிழக்கு nஜரூசலத்தின் ஜபல் அல் முக்கபர் பகுதியில் இஸ்ரேல் துருப்புகளுடன் ஆத்திரமுற்றிருக்கும் பலஸ்தீனர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களினதும் வீட்டை தரைமட்டமாக்கும் முயற்சி யிலும் இஸ்ரேல் பொலிஸ் ஈடுபட் டுள்ளது. எனினும் மோதல் கார ணமாக அந்த முயற்சி தடுக்கப் பட்டுள்ளது. இஸ்ரேலை பிரிக்கும் மதில் சுவரால் ஏனைய nஜரூசல பகுதி களுடனான தொடர்பு துண்டிக் கப்பட்டிருக்கும் அல் ரெம் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந் தது 10 பலஸ்தீனர்கள் காய மடைந்துள்ளனர்.
தெற்கு nஜரூசலத்தில் சுர் பஹ்ர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சுமார் 25 பேர் காயமடைந் திருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரம் குறிப்பிடுகிறது.இந்த பதற்றம் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் பரவியுள்ளது. தெற்கு நப்லுஸ் கிராமமான உரிப்பில் இஸ்ரேல் குடியேற்றக் காரர்கள் பலஸ்தீன பாடசாலை ஒன்றை தாக்கியுள்ளனர்.
அதேபோன்று ஹெப்ரூன் வீதி ஊடாக கடந்துசெல்லும் பலஸ்தீனர் களின் கார்களையும் இஸ்ரேல் குடியேற்றக்காரர்கள் தாக்கியுள்ள னர். இதேவேளை யு+த வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடத்திய அபு+ ஜமாலியின் மனைவி, பெற்றோர், மனைவியின் பெற்றோர், சகோதரர் என குடும்பத்தினர் 10 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
வடக்கு nஜரூசலத்தில் கடந்த செவ்வாய் மாலை பலஸ்தீனர் ஒருவரின் கால் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார். கிழக்கு nஜரூசலத்தில் இருக்கும் புனித அல் அக்ஸா பள்ளி வாசலையொட்டி அங்கு அடிக்கடி மோதல்கள் இடம்பெறுகின்றன. சிலவேளை அவை உயிர்ப்பலி கொல்லும் தாக்குதல்களாக மாறி வருகின்றன.
முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் தொடர்ச்சியாக தீவிர வலதுசாரி யு+தர்கள் நுழைய முற்படுவது தொடர்பில் பலஸ்தீனர் கள் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகி யுள்ளனர். இந்த வளாகம் தமது புனித தலமாக ய+தர்கள் கருதி வருகின்றனர். அதேபோன்று பள்ளிவாசல் வளா கத்திற்குள் தொழுகைக்குச் செல் லும் முஸ்லிம்களுக்கு இஸ்ரேல் படையினர் கடும் கட்டுப்பாடுகளை விதிப் பதும் பலஸ்தீனர்களின் கோபத்திற்கு காரணமாகும்.

ad

ad