புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

ஸ்மித் சதம் தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி
ஸ்மித்தின் அபார சதம் மூலம் தென்னாபிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிpயில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா- தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம்மெல்பேர்னில் நடைபெற்றது. டொஸ் வென்ற தென் ஆபிரிக்கா பட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக டி காக்கும், அம்லாவும் களம் இறங்கினார்கள். டி காக் 17 ரன்னிலும், அம்லா 18 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் வந்த டி வில்லியர்ஸை (91 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் தென்ஆபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்தது.

பின்னர் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா பட்டிங்கை தொடஙகியது. தொடக்க வீரர்களாக பின்ஞ்- வார்னர் ஜோடி களம் இறங்கியது.

வார்னர் 4 ரன்னிலும், பின்ஞ் 22 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த வொட்சன் 19 ரன் எடுத்து சொதப்பினார்.

4ஆவது வீரராக களம் இறங்கிய ஸ்மித் நிலைத்து நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் அவுஸ்திரேலியா வெற்றியை நோக்கி பயணித்தது.

அவுஸ்திரேலிய அணி 267 ரன்கள் எடுத்திருக்கும்போது ஸ்மித் 112 பந்தில் 7 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய வடே 52 ரன் எடுத்தார். இதனால் அவுஸ்திரேலியா 49 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 268 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலியாவின் ஸ்மித் தெரி வானார்.
 

ad

ad