புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2014

அபிவிருத்திக் குழுக் கூட்ட மோதல்! கூட்டமைப்பு உறுப்பினர்களை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு 
கடந்த 16ம் திகதி இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூடமைப்பினருக்கும். ஈ.பி.டி.பி யினருக்கும் இடையில்
கருத்து மோதல்களாக ஆரம்பித்து, இறுதியில் அடிதடியாக முடிவடைந்திருந்தது.
இதில் ஈ.பி.டி.பியினரால் தமிழ்த் தேசியக் கூடமைப்பினர் தாக்கப்பட்டதுடன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் காயமடைந்திருந்தார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தம்மைத் தாக்கியதாக ஈ.பி.டி.பியினர் பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உடனே வெளியேறியும் விட்டனர்.
இந்நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களைத் தாக்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் ஆகியோரை இன்று காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்புக்கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீட்டுக்கு வந்த பொலிசார் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்ட காகிதத்தை வழங்கியதுடன், அது சம்பந்தமாக கேட்டபோது தமிழில் நாளை விசாரணைக்கு வருமாறு கூறினர்.
அக்காகிதத்தில் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் எதுவும் இடப்படவில்லை. இது சம்பந்தமாக அழைக்கப்பட்டவர்கள் எமது வடமாகாண அவைத்தலைவர் மற்றும் எமது முதல்வருடன் கலந்துரையாடி அடுத்த முடிவுகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

ad

ad